இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட யாழ்ப்பாண சதுரங்க வலயமட்டப் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் சங்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு லோஜினி முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன் பசுபதிப்பிள்ளை கார்த்திகா ஐந்தாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
இலங்கை சதுரங்க சம்மேளனமானது இலங்கையை ஐந்து சதுரங்க வலயங்களாகப் பிரித்து இப்போட்டியை நடத்தியது. கொழும்பு , கண்டி, யாழ்ப்பாணம் , காலி, குருநாகல், என்பனவே அவ் ஐந்து சதுரங்க வலயங்களாகும்.
யாழ்ப்பாண சதுரங்க வலயத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற வீராங்கனைகள் தேசிய மட்ட B பிரிவுப் போட்டிகளில் விளையாடத்தகுதி பெற்றுள்ளனர்.
1ம் இடம் – தி.லோஜினி – கிளிநொச்சி
2ம் இடம் – ஆர். லக்சிகா – யாழ்ப்பாணம்.
3ம் இடம் – வி. பிரவீனா – யாழ்ப்பாணம்.
4ம் இடம் – எஸ். ஆரபி – யாழ்ப்பாணம்.
5ம் இடம் – ப. கார்த்திகா – கிளிநொச்சி.
0 comments:
Post a Comment