கொழும்பில் சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுக நகர் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது சீன விஜயத்தின்போது அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
சீன அரசின் அழைப்பை ஏற்று மூன்று நாள் அதிகாரபூர்வ விஜயமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பெய்ஜிங் புறப்பட்டுள்ளார்.
பிரதமரின் இந்த பயணம் தொடர்பில் கேட்டபோதே, நிரோஷன் பெரேரா இவ்வாறு கூறினார்.
பிரதமரின் சீன விஜயமானது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக்கொண்டது என்று கூறிய அவர், தற்போதைய அரசு ஒருபோதும் சீனாவுக்கு எதிரான கொள்கையை கடைபிடித்ததில்லை எனவும், முதலீடுகளை பெற்றுக்கொள்வது தற்போதைய தேவையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுக நகர் செயல்திட்டத்தை நிறுத்தினால், மிகப் பெரிய அபராதத் தொகையை சீன அரசுக்கு இலங்கை செலுத்த நேரிடும் எனவும் அமைச்சர் நிரோஷன் பெரேரா கூறினார்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது இந்த பயணத்தின்போது, சீன அதிபர் உட்பட முக்கியஸ்தர்களை பலரை சந்தித்து பேசவுள்ளார் எனவும் அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்
0 comments:
Post a Comment