மருதானையில் இருந்து களுத்துறை வரை பயணித்த ரயிலில் மோதி இமேஷி பெரேராவும் அவரது நண்பியும் உயிரிழந்துள்ளனர்.
பம்பலப்பிட்டி புனித கன்னியர் மடத்தில் உயர் தரம் இறுதி ஆண்டில் கல்வி பயின்று வந்த இவர்கள் இருவரும் நேற்றிரவு 7.30 மணியளவில் வௌ்ளவத்தையில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ளனர்.
இதன்போதே அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 19 வயதான இமேஷி யசர பெரேரா மற்றும் ஷெரோன் சில்வா ஆகிய மாணவிகளே உயிரிழந்துள்னனர்.
விபத்து இடம்பெற்ற ஸ்தலத்திலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதுடன், சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன
0 comments:
Post a Comment