இலங்கையின் வடக்கில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இடங்களையே தற்போது ராணுவம் கையகப்படுத்திவருவதாகவும் புதிதாக நிலத்தை கையகப்படுத்தும் திட்டம் இல்லையென்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவத்தினர் வடக்கில் பல பகுதிகளிலும் பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்துகின்றனர் எனக் கூறி, யாழ் அரச அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
இதன் பின்னணியில் காணிகளை கையகப்படுத்தும் ராணுவத்தினரின் செயற்பாடுகள் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உதாரணமாக, பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகிய பகுதிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கை ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இது போல, முன்பு குறிப்பிடப்பட்ட இடங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைதான் தற்போது மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த அவர், புதிதாக எந்த காணியும் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்படுவதில்லை எனவும் கூறினார்.
bbc
0 comments:
Post a Comment