இலங்கையில் அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து தொடங்கிய முதலாவது ஆடைத் தொழிற்சாலை கிழக்கு மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் இப்படியானத் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதாக மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையில் தற்போது 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தப் புதிய ஆடைத் தொழிற்சாலைகள் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்-முஸ்லிம் பெண்களின் வாழ்வாதாரம் ஓரளவுக்கு உயரும் என உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்
கிராமப்புற இளைஞர்-யுவதிகளுக்கு உள்ளூரிலேயே தொழில் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், அடுத்த கட்டமாக சம்மாந்துறை மற்றும் மூதூர் கிழக்குப் பிரதேசங்களில் இப்படியான ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன என்றும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்போது அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாற்ற தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் செல்வது பெருமளவு குறையும் என உள்ளூர் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இலங்கையிலிருந்து வீட்டுப் பணிப் பெண்களாகச் செல்பவர்கள் பலவிதமான துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளுக்கு ஆளாகி நாடு திரும்பியுள்ளனர்.
0 comments:
Post a Comment