பந்து தலையில் பட்டதன் காரணமாக உபாதைக்கு உள்ளாகியுள்ள கௌசல் சில்வா, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்வாரா இல்லையா என எதிர் வரும் சில நாட்களில் தீர்மானிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
கௌசல் சில்வாவை விரைவாக ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்ட தரப்பினருக்கு இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் மருத்துவக் குழு பாராட்டை தெரிவித்துள்ளது.
மீண்டும் கௌசல் சில்வா விரைவாக விளையாடுவதற்கு அனுமதியளிப்பதா அல்லது ஓய்வெடுக்க செய்வதா என்பதை பற்றி மருத்துவர்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கவுள்ளதாக கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் அவர் இப்போது தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நாளை கௌசல் சில்வா வீட்டிற்கு செல்லமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. D C
0 comments:
Post a Comment