பாடசாலை முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் தந்தையாருடன் சென்ற மாணவியை தனியார் பயணிகள் பேருந்து மோதித்தள்ளியதில் மகளும், தந்தையும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
28/04 மதியம் ஏ9 வீதி ஆஷh கடையடி,மீசாலையில் இடம்பெற்ற இவ் விபத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் தரம் 6ல் கல்வி பயிலும் மீசாலை மேற்கு ,மீசாலையைச் சேர்ந்த அருட்குமரன் ஆதினா வயது 11, சதாசிவம் அருட்க்குமரன் ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் பற்றி அறிகையில்-மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் குறித்த மாணவி பாடசாலை முடிவடைந்ததும் தந்தையாருடன் சைக்கிளில் மீசாலை சந்தியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில்,யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து முன்னே பயணித்துக் கொண்டிருந்த உழுவியந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேலையிலேயே பேரூந்து வேக கட்டுப்பாட்டை இழுந்து எதிரே பயணித்துக் கொண்டிருந்த சைக்கிளை மோதித் தள்ளிய பேருந்து புகையிரதப் பாதையில் மேதி நின்றது.
மாணவியை மோதித்தள்ளிய பேருந்ததின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.விபதத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளனர்.
பாடசாலை முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் தந்தையாருடன் சென்ற மாணவியை தனியார் பயணிகள் பேருந்து மோதித்தள்ளியதில் மகளும்,தந்தையும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment