அரசாங்க நிறுவனங்களில் நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் செயலமர்வுகளில் போஷாக்கான உணவு அல்லது பழச்சாறு வழங்கும் தேசிய கொள்கையொன்று அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக என்று சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் 68 வீதமானவர்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களாவர். இதனை தடுக்கும் நோக்கிலேயே இக்கொள்கையை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும், தெரிவித்தார்.
அண்மையில் அரசாங்க வைத்தியர்கள் சங்கத்துடன் நடைபெற்ற கூட்டமொன்றின் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment