வெள்ளவத்தை பிரதேத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபசார விடுதியில் கைது செய்யப்பட்ட இரு தாய்லாந்து நாட்டு யுவதிகளுக்கு எச் ஐ வி எட்ஸ் தொற்று இருப்பது வைத்தியர்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
கடந்த வாரம் வெள்ளவத்தை போர்த் லேனில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவலைப்பில் இலங்கை பெண்கள் ஏழு பேரும் இரண்டு தாய்லாந்து பெண்கள் கைதான நிலையில் அவர்கள் கல்கிசை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது குறித்த பெண்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை நீதிபதி கோரியதுடன் முகாமையாளர் உட்பட ஒன்பது பெண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மன்றில் குறித்த பெண்களின் மருத்துவ அறிக்கை சமர்பிக்கப்பட்ட போது தாய்லாந்து நாட்டுப்பெண்களுக்கு எச் ஐ வி தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
0 comments:
Post a Comment