இந்த நாட்டின் வரலாற்றில் பாரியளவு ஊடக சுதந்திரத்தை சமகாலத்தில் பொதுமக்களும், ஊடக நிறுவனங்களும் அனுபவித்து வருவதாகவும், இந்த சுதந்திரத்தை தொடர்ந்தும் பாதுகாப்பது ஊடகங்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை (19) நாட்டிலுள்ள ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த ஊடகவியலாளர்கள் முயற்சித்தால், பொது மக்களே அதற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் எனவும் ஜனாதிபதி நினைவுபடுத்தினார்.
தொலைக்காட்சி நிறுவனங்களை டிஜிட்டல் முறைமைக்குட்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளும் தற்பொழுது நிறைவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜப்பான் தொழில்நுட்ப முறைமைக்கு ஏற்ப டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இதற்கு ஏற்றால் போல் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நடுநிலையான தகவல் வழங்கும் முறைமையே சிறந்த முன்மாதிரியானது எனவும் இதனை இலத்திரனியல் ஊடகங்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment