மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க, இம்முறை ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவர்கள் குழு குறைந்தது நான்கு மாதங்களுக்கேனும் அவர் விளையாட முடியாது என தெரியப்படுத்தியுள்ளது.
இதேவேளை, காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, எதிர்வரும் இங்கிலாந்து இலங்கைத் தொடரில் இருந்தும் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, லசித் மாலிங்கவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட விஷேட மருத்துவக் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை அவரை குறித்த நிபுணர் குழுவின் முன் ஆஜராகுமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்
0 comments:
Post a Comment