05/04/2016 அன்று வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மின்னல் தாக்கி இலங்கேஸ்வரன் சுலக்க்ஷன் என்ற 17 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்த கவலைக்குரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது (குறித்த செய்தி )
குடும்ப உறுப்பினரை பறிகொடுத்த கவலையில் உள்ள குடும்பத்தாருக்கு "வெந்த புண்ணில் வேலை பாச்சுவது" போன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் இலங்கேஸ்வரன் இன்று ஊடகத்திற்கு கருத்து தெரிவிககையில்
எனது மகன் மின்னல் தாக்கி இறந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகின்றது இதுவரையில் எந்த உதவியும் எமக்கு கிடைக்கவில்லை
இச்சந்தர்பத்தில் வவுனியா அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் சூரியராஜ் எமக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டதாக 17/04/2016 அன்றைய தின உதயன் பத்திகையில் செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாட்டால் மனமுடைந்து போய்யுள்ளதாக குறிப்பட்ட அவர் வவுனியா DMC அதிகாரியின் பொயான அறிக்கையா? அல்லது பத்திரிகையின் பொறுப்பற்ற தன்மையா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
0 comments:
Post a Comment