ஒரு பெண்ணுக்கு இருவர் ஆசைகொண்டு சண்டையில் ஈடுபட்ட சம்பவமொன்று கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனுக்கும், மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் மகனுக்கும் இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சரின் மகன் தற்பொழுது பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடிதடியின் பின்னர் இருவரும் பொலிஸுக்குச் சென்றுள்ளனர். இருப்பினும், அவர்களிருவரினதும் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. பின்னர் இருவரின் விருப்பத்தின் பேரிலும் சமாதானம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த சண்டையின் போது ஹோட்டலின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை வழங்குமாறு ஹோட்டல் நிருவாகிகள் அவர்கள் இருவருக்கும் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment