வவுனியா சோயா வீதியிருக்கும் வவுனியா நகரபைக்கு சொந்தமான மாடு அறுக்கும் மடுவம் இன்று அதிகாலை 5.30மணியளவில் விஷேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு அங்கு பணிபுரிந்த 4பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு பசுமாடுகளும் அறுத்த நிலையில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று அதிகாலை குறித்த மாடு அறுக்கும் (கொல் களம்) மடுவத்தில் பசுமாடு அறுக்கப்படுவதாக விஷேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவல் அடிப்படையிலேயே அங்கு சென்ற இராணுவத்தினர் அறுத்த நிலையிலிருந்த இரண்டு பசுமாட்டையும் மேலும் நான்கு மாடுகளையும் பிடித்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. வழமையாக மாடு அறுக்கும் போது பொது சுகாதார பரிசோதகர் முன்நிலையில் பரிசோதனையின் பின்னரே மாடு அறுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இன்று பொது சுகாதார பரிசோதகர் இல்லாமல் நேரகாலத்துடன் பசுமாட்டினை அறுத்து விற்பனைக்குத் தயாரா இருந்தபோதே விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை பொது சுகாதார பரிசோதகருடன் தொடர்பு கொண்டபோது மேல் அதிகாரியின் அனுமதியின்றி கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளார். விஷேட அதிரடிப்படையினர் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணையின் பின்னர் இன்று மாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மடுவம் கேள்வி விலை கோரல் மூலம் நகரசபையிடமிருந்து தனியார் ஒருவர் எடுத்து நடாத்திவருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment