வவுனியா மாவட்ட புகையிரத கடவை காப்பாளர் சங்கம் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக அனைத்து ஊழியர்களினதும் ஒரு நாள் கொடுப்;பனவான ரூபா 250 பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முன்வந்துள்ளதாக வவுனியா மாவட்ட புகையிரத கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் ஏஸ்.கே.றொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
புகையிரத கடவை ஊழியர்களுக்கு பொலிஸ் திணைக்களம் ஊடாகவே சம்பளம் வழங்கப்படுவதாகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ள அனர்த்தம் காரணமாக அசாதாரண சூழ்நிலைக்குள் சிக்கித் தவிக்கும் எம் உறவுகளுக்கு உதவும் முகமாக வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் 75 ஊழியர்களின் விருப்பத்திற்கு அமைவாக தலைவர் செயலாளர் ஆகியோரின் தீர்மானத்திற்கு இணங்க ஒருநாள் கொடுப்பனவை அனர்த்த நிவாரண முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு வவுனியா பொலிஸ் அத்தியட்சகரை கடிதம் மூலம் கோரியிருப்பதாகவும் பொலிஸ் அத்தியட்கர் இச்செயற்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை நிவாரணத்திற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment