யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் எதிர்வரும் மே 27ம் மற்றும் 28ம் திகதிகளில் மாபெரும் தொழிற்சந்தை ஒன்றை பம்பை மடுவிலுள்ள வவுனியா வளாகத்தில் நடாத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
இந்நிகழ்வில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், ஆடை தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி, தொழில்சார் கற்கை, தொழில் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் உட்பட 30க்கு மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
இந்நிறுவனங்கள் தமக்கு தேவையான தொழில் வல்லுனர்களை பல்வேறு துறைகளில் நேரடியாக தெரிவு செய்து வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளன.
இவ் வேலை வாய்ப்புக்கள் பல்வேறு தகமையுடையவர்களுக்கும் ஏற்ற வகையில் இருக்கும் இந்நிகழ்வானது 27 ம் திகதி அனைத்து பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்காகவும் 28ம் திகதி அனைத்து வேலை தேடுபவர்களுக்காகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள் இரண்டு நாட்களும் இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இவ்விரு நாட்களும் விசேட பஸ் சேவைகள் வவுனியாவிலிருந்து பம்பை மடுவிற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுகள் இரு நாட்களும் காலை 9 மணி முதல் மலை 4மணி வரை இடம் பெறும் என வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன் இந்நிகழ்வுக்கு பல நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருப்பதால், வருகை தருபவர்கள் தமது சுயவிபரக்கோவையின் பல பிரதிகளை எடுத்துவருமாறு அன்புடன் கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
இது தவிர இந்நிகழ்வுக்கு நேர காலத்துடன் வருகைதந்து கலந்து கொள்ள்வதன் மூலம் தாம் தெரிவு செய்யப்படாத ஏமாற்றத்தினை தவிர்த்து கொள்ளும்படியும் வினவப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கு 0778443891 என்ற தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment