பாகுபலி படம் பார்த்து இதுபோல் ஒரு படம் இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் மனதில் நினைத்திருப்பார்கள். அதற்கான வாய்ப்புக்கும் அவர்கள் காத்திருக்கிறார்கள். அதுபோல் நினைத்த டைரக்டர் சுந்தர்.சி, அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டார்.
சரித்திர பின்னணியில் பாகுபலி பாணியில் ஒரு மல்டி ஸ்டார் படத்தை தர அவர் முயற்சி எடுத்துள்ளார். ஒரே சமயத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் இந்த படத்தை உருவாக்கவும் அவர் முடிவு செய்திருக்கிறார்.
இந்த படத்தை மறைந்த ராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. பிரமாண்ட பொருட் செலவில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக மன்னர் வேடத்தில் நடிக்க சூர்யாவிடம் பேசி வருகிறார்கள்.
சிங்கம் 3 படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து 2 படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்கான பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில் சுந்தர்.சி தனது படத்தில் நடிக்க கேட்டிருப்பதால், அது குறித்து தீவிர ஆலோசனையில் அவர் இறங்கியுள்ளாராம். சரித்திர படம், அதே சமயம் கமர்ஷியல் வேல்யூ அதிகமுள்ள படமாக இருக்கும் என்பதால், இதில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டுகிறாராம். மேலும் ஒரு சில பிரபல ஹீரோக்கள் இதில் நடிப்பார்களாம்.
இது குறித்து பட வட்டாரம் கூறுகையில், ‘‘பாகுபலி படத்துக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்ட கமலகண்ணன் இந்த படத்திலும் பணியாற்றுகிறார். இப்போதைக்கு அவர் மட்டும்தான் படத்துக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற விவரங்களை சுந்தர்.சி விரைவில் வெளியிடுவார்’’ என்றது.பாகுபலி படம் பாலிவுட்டில் மட்டும் ரூ.150 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
அதனால் பாலிவுட் மார்க்கெட்டையும் குறி வைத்து சுந்தர்.சி இப்படத்தை இயக்க உள்ளாராம். அதனால் தீபிகா படுகோன் இதில் ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் விரும்புகிறாராம்.
0 comments:
Post a Comment