வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை பொலிசாரின் ட்ரக் வாகனத்துடன் இளைஞன் ஒருவர் மோதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். பொலிசாரின் ட்ரக் வாகனத்தில் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. எனினும் இன்று வரையில் எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை. காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவரிடமிருந்து எ;வ்வித முறைப்பாடும் பொலிசாரால் பெறப்படவில்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளதுடன் பொலிசாரால் தேயிலை, சீனி என்பன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவரிற்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பொலிசார் கடமைக்கு வந்து நின்றுவிட்டு செல்வதாகவும் தெரிவித்துள்ள அவரது மனைவி நேற்று வைத்தியர்கள் காயமடைந்த தனது கணவரிற்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் காலுக்கு கம்பி வைப்பதற்கு பிறிதொரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கு ஜம்பதாயிரம் ரூபா தேவைப்படுவதாகவும் சத்திரசிகிச்சை செயது முடிக்கப்பட்டதும் ஜம்பதாயிரம் ரூபாவினை திருப்பித்தருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
பொலிசாரின் அதிக வேகம் காரணமாகவே தான் வீதியைக்கடக்க முற்பட்டபோது ட்ரக் வண்டி வந்து மோதியதாகவும் விபத்தில் காயமடைந்த இளைஞர் மனைவியிடம் தெரிவித்துள்ளதாகவும், பொலிசார் இவ்விபத்தில் கூடிய கவனம் எடுக்கப்பட்வில்லை என்றும் மனைவி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment