அநுராதபுரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ருவன்வெலிசாயா புத்தர் சிலைக்கு அண்மையில் அமைந்துள்ள விஹார மாளிகை புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் மீண்டும் வழிபடுவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (17) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
ருவன்வெலிசாயா புத்தர் சிலைக்கு அண்மையில் அமைந்துள்ள விஹார மாளிகையின் நிர்மாணப் பணிகள் 1950 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்டதுடன் அன்று தொடக்கம் முறையான புனர்நிர்மாணச் செயன்முறைக்கு உட்படுத்தப்படாமையின் காரணமாக இது உடைந்து விழும் நிலையில் காணப்பட்டது.
ருவன்வெலிசாயா விஹாராதிகாரி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரின் ஆலோசனையின் கீழ் விஹார மாளிகை புனர்நிர்மாணம் செய்யப்பட்டதுடன் இதற்கான முக்கிய பங்களிப்பை ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் மேற்கொண்டது.
17/06 மாலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ருவன்வெலிசாயாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் முதலில் ருவன்வெலிசாயாவில் அமைந்துள்ள புத்தர் சிலையை வழிபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின் நினைவுப் பேழையினை திறைநீக்கம் செய்து புனர்நிர்மாணம் செய்யப்பட்ட விஹார மாளிகையினைத் திறந்து வைத்தார்.
விஹார மாளிகையின் நுழைவாயிலைத் திறந்து வைத்து புத்தர் சிலைக்கு முதலாவது பூஜை வழிபாட்டை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள் விஹார மாளிகையை பார்வையிட்டார்.
ருவன்வெலிசாயா தொடர்பான விபரங்கள் உள்ளடங்கிய இணையதளத்தினை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.
விஹார மாளிகையை புனரமைப்பதற்காக பங்களிப்புச் செய்த இலங்கை தரைப்படையினரைப் பாராட்டி நினைவுச் சின்னங்கள் ஜனாதிபதியின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
ருவன்வெலிசாயா புத்தர் சிலைக்கு அண்மையில் இன்று வெளிச்ச பூஜையினை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
ருவன்வெலிசாயா விஹாராதிகாரி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி அவர்கள் அவர்களிடம் நலம் விசாரித்து பரிசுப் பொருட்களை பூஜை செய்தார்.
மல்வத்தை பீடத்தின் துணைத் தலைவர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016-06-17
0 comments:
Post a Comment