வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று 18.06.2016 மதியம் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நெளுக்குளம் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த மகேந்திர வான் முன்னால் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டியை மோதியத்தள்ளியதில் தூக்கி வீசப்பட்ட குடும்பப் பெண் படுகாயமடைந்ததுடன் செலுத்தி வந்த ஸ்கூட்டி மகேந்திர வாகனத்திற்குள் அகப்பட்டு லக்சபான மின் கம்பத்துடன் மோதி நின்றுள்ளது.
மகேந்திர வாகனம் கட்டுப்பாட்டை இழந்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் பொலிசார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த நாதன் வனஜா 35வயது குடும்ப பெண் சுயநினைவு அற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. இரண்டு பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணையினை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment