விஷாலின் அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி கன்னடத்தில் ‘ரக்ஷாசி’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘பிசாசு’ படத்தின் ரீமேக் ஆகும். இதில், ராதாரவி நடித்த வேடத்தில் ஜி.கே.ரெட்டி நடித்திருந்தார்.
இந்நிலையில், ஜி.கே.ரெட்டி நேரடி தமிழ் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நிவின் பாலி நடிக்கும் நேரடி தமிழ் படம் ஒன்றில் ஜி.கே.ரெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடி, மணப்பாடு ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் கன்னடத்தில் வெளிவந்த ‘உள்ளிடவாறு கண்டன்டே’ படத்தின் ரீமேக் ஆகும். கன்னடத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
0 comments:
Post a Comment