வவுனியா மாவட்ட இணைய ஊடக அமைப்பு இன்று 21.06.2016 மாலை குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இணைய ஊடக உறுப்பினர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட இணையங்களை ஒன்றினைத்து ஊடகவியலாளர்களை ஒழுக்க ரீதியில் கட்டமைப்பதுடன் ஊடகப்பயிற்சி உள்ளிட்ட வளங்களைப்பெற்று திறமையான ஊடகவியலார்களாக உருவாக்குவதற்காகவும் அவர்களுக்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் இவ் இணைய ஊடக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஒன்றுகூடலில் தலைவர் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் இணைய ஊடகவியலாளர்களால் தெரிவு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து தலைவரால் ஒழுக்க விதிமுறைகள், யாப்பு விதி முறைகள் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இணைய ஊடக அமைப்பு உருவாக்கம் தொடர்பாகவும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதுடன். அடுத்த கூட்டத்தில் விடுபட்ட இணைய ஊடகவியலாளர்களையும் இணைத்து செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் இன்றைய இணைய ஊடக அமைப்பின் ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்கள் பதிவுசெய்யப்பட்ட இணைய ஊடகங்களின் ஊடகவியலாளர் அடையாள அட்டைகளின் பிரதிகளை வழங்கி தங்களது உறுப்புரிமையினை உறுதிசெய்ய கோரியதுடன். அவர்களது ஆலோசனைகளு ம் உள்வாங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்த தலைவரின் உரையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
ஊடகப்பிரிவு
இணைய ஊடகவியலாளர் அமைப்பு
வவுனியா மாவட்டம்
21.06.2016
0 comments:
Post a Comment