இலங்கையில் முன்னணி நிறுவனத்தின் வருடாந்த வெளிநாட்டு சுற்றுலாவிற்கு தாய்லாந்திற்குச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விபத்து சம்பவம் ஒன்றில் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடபகுதியில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு வியாபார முகாமையாளராக கடமையாற்றிய அ. நிர்மலராஜன் (யூலி) 37வயது 04.06.2016 அன்று தாய்லாந்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாகவும் இச்சுற்றுலாவிற்கு நிறுவனத்தில் பணிபுரிந்த சக பணியாளர்களுடன் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இரவது சடலத்தினை இலங்கைக்கு எடுத்துவருவதற்கு குறித்த நிறுவனம் ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் மேலும் தெரியவருகின்றது. மன்னாரை பிறப்பிடமாகவும் தற்போது திருகோணமனையில் வசித்தவருவதும் குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment