வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் இன்று (22.06.2016) காலை வயோதிபரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் தங்கியிருந்து பல வருடங்களாக பிச்சை எடுக்கும் பூவரசங்குளம் தட்டங்குளத்தினை சேர்ந்த சின்னையா காளிமுத்து (வயது 65) இன்று காலை வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் அமைந்து புத்தகநிலையத்திற்கு அருகாமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் சடலத்தினை பார்வையிட்டதுடன் மரண விசாரணையினை மேற்கொள்வதற்கு சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலத்தினை உறவினரிடம் ஒப்படைக்குhறு உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment