வவுனியாவில் 05.05.2016 காலை தனியார் பேரூந்து நடத்துநர்கள் இருவர் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் கைகலப்பிலும்; ஈடுபட்டுள்ளனர். எனினும் அங்கிருந்தவர்களின் தலையீட்டால் சமரசமாக்கிவைக்கப்பட்டுள்ளது.
இரவு 11மணியளிளவில் குறித்த நடத்துநர் இளைஞர்கள் சிலருடன் வவுனியா முதலாம் குறுத்குத் தெருவில் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் புதூர் கோவிலுக்குச் செல்வதற்கு பேரூந்துகள் நிறுத்தப்பட்டு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த சமயம் எதிர்பாரத விதமாக அவ்விடத்திற்கு வந்த தனியார் பேரூந்து நடத்துநர் மற்றும் சில இளைஞர்கள் வாள் கத்தி, மதுபோத்தல்கள் தடியுடன் வந்து குறித்த வாய்தர்க்கத்தில் ஈடுபட்ட நடத்துநர் மீது தாக்குதல் மேற்கொண்டபோது தாக்குதலை தடுக்க முற்பட்ட தனியார் பேரூந்து சாரதி மீது மதுபோத்தலால் தாக்குதல் நடத்த வந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டபோது தலையில் படுகாயமைந்த தனியார் பேரூந்து சாரதியான சற்குணநாதன் ஜெயசீலன் 28வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடாத்திய இளைஞர் குழுவில் ஆறுபேருக்கு மேல் இருந்துள்ளதாகவும் தெரிவித்த தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் தாக்குதல் நடத்த வந்த இளைஞர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் இன்று 06.06.2016 தாக்குதல் நடத்திய இருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் மேலும் சிலரை பொலிசார் தேடி வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இளைஞர்கள் குழுவினரின் தாக்குதல் சில நிமிடங்கள் நீடித்ததாகவும் பின்னர் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமைகளை கட்டுப்படுத்தியதாகவும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் நான்குக்கு மேற்பட்ட பேரூந்துகளும் சேதத்திற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment