போதைப் பொருளிலிருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்தில் எச்சரிக்கையைப்பார்க்கிலும் முன்மாதிரியே மேலானது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தமது மனச்சாட்சிக்குஏற்ப எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இன்று (26) முற்பகல் நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற போதைப் பொருளிலிருந்து விடுதலைபெற்ற நாடு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாவது கட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
போதைப்பொருளை ஒழித்துக்கட்டுவதற்காகமுன்னெடுக்கப்படும் எல்லா நிகழ்ச்சித்திட்டங்களையும் எதிர்காலத்தில் முறையாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இனிவரும்காலங்களில் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்களினதும் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டங்களினதும் நிகழ்ச்சி நிரலில் போதைப்பொருளை ஒழித்துக்கட்டுவதற்காக மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட நிழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்படுவது கட்டாயமாக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நுவரெலியா மாவட்ட மக்கள் முகங்கொடுத்திருக்கும் வறுமை மற்றும் மந்தபோசனை நிலைமைகளுக்கு முக்கிய காரணம் ஆண்களைப்போன்று பெண்களும் போதைப்பெருள் பாவனைக்கு அடிமையாகியிருப்பதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தும்நோக்குடன் மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அடுத்துவரும் சில மாதங்களில் மாவட்டத்தில் பல்வேறு விரிவான நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியும் நுவரெலியா மாவட்ட செயலகமும் இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்துள்ளன.
நுவரெலியா மாவட்ட செயலாளர் கே.எச்.ஏ மீகஸ்முல்ல அவர்களினால் நுவரெலிய மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஐந்து பாடசாலை மாணவர்ளுக்கு உத்தியோகபூர்வ இலட்சிணை அணிவிக்கப்பட்டதோடு, போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை பொலிஸ் திணைக்களம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம்ஆகியவற்றைசேர்ந்தஅதிகாரிகள் மற்றும் நுவரெலியா பிரதேச ஊடகவியலாளர் ஒருவருக்கும் இதன்போது ஜனாதிபதியினால்விருதுகளும் வழங்கப்பட்டன.
அமைச்சர் பீ. திகாம்பரம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஹன கீர்த்தி திசாநாயக்க, போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்த கித்தலவஆரச்சி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment