வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட விஷேட தேவைக்குட்பட்ட நபரை நேற்று முன்தினம்; கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்வம் தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் குட்செட் வீதி, கற்குழி, தோணிக்கல் போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக வீடுகளில், மற்றும் அலுவலகங்களில் திருடிய சந்தேக நபரினை நேற்று முன்தினம் கிடைத்த தகவல் அடிப்படையில் கைது செய்ய முடிந்துள்ளதாகவும் திருடிய நகையினை கொழும்பு செட்டித் தெருவில் விற்பனை செய்த நபரையும் கைது செய்துள்ளதாகவும் 75பவுனுக்கு மேற்பட்ட திருட்டில் குறித்த சந்தேக நபர் ஈடுபட்டுள்ளதாகவும் எனினும் சில தங்க நகையினையே தம்மால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்ததுடன் இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் மிகுதி தங்க நகையினை திருடிய நபர் இவர்களிடமே கொடுத்து வைத்துள்ளதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாகவும் அவர்களையும் தேடி வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
விசாரணையின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment