பால் என்பது நிச்சயம் இன்றியமையாதது. தாய்ப்பாலை போல் மகத்துவம் இருக்கும் உன்னதமான உணவு இதுவரை இல்லை. அதேபோல், நாம் அன்றாடம் காலையை ஆரம்பிப்பதும் பாலினாலே.
ஆனால் பால் எவ்வளவு தேவை என சரியாக யாருக்கும் தெரிவதில்லை. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பால் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது, எவ்வளவு பால குடிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
பாலில் உள்ள சத்துக்கள் :
பாலில், கார்போஹைட்ரேட், புரோட்டின், விட்டமின் ஏ, பி, டி, கால்சியம் மற்றும் மற்ற மினரல் சத்துக்களை கொண்டுள்ளது. பாலில் உள்ள கேசின் நம் உடல் வளர்ச்சிக்கு தேவையான மிக முக்கியமான புரோட்டின். ஆகவேதான் பாலினை முழுமையான புரோட்டின் என்று சொல்கிறார்கள்.
பலன்கள் :
தினமும் சிறு வயதிலிருந்து பால் குடித்து வந்தால், எலும்பு, பற்கள் வலிமையாகும். அதேபோல் தொடர்ந்து பால் உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராது என்று ஆய்வு கூறுகிறது.
அளவுக்கு அதிகமாக பால் குடித்தாலும் ஜீரண பிரச்சனைகளை உண்டாக்கும். இப்போது ஒவ்வொரு வயதிலும் எவ்வளவு பால் குடிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
0-12 மாதங்கள் :
இந்த வயதில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்தது. மாட்டுப் பால் மற்றும் பாக்கெட் பால் குடுப்பதால், ஜீரண பிரச்சனைகள் உண்டாகும்.
தாய்ப்பாலில் உள்ள சில அரிய சத்துக்கள் குழந்தையாக இருக்கும் போது அவர்களின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு கட்டாயம் தேவை. அந்த சத்துக்கள் மற்ற பாலில் கிடையாது.
1-10 வயது குழந்தைகளுக்கு :
இந்த வயதினில்தான் ஒவ்வொரு எலும்புகள் உருவாகும் காலம். ஒவ்வொன்றாய் இணையும் நேரத்தில் கால்சியம் அதிகம் தேவைப்படும். ஆகவே நிறைய கால்சியம் உள்ள உணவுகளோடு பால் தர வேண்டும்.
1-3 வரை உள்ள குழந்தைகளுக்கு 360 மி.கி. அளவு கால்சியம் தேவை. ஆகவே ஒரு டம்ளர் அளவு பால தர வேண்டும்.
4-10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 450-500 மி.கி கால்சியம் தேவை. இவர்களுக்கு 2 டம்ளர் பால் கட்டாயம் தரப்பட வேண்டும்.
11-18 வயது உள்ளவர்களுக்கு :
இந்த வயதில் 800-1000 மி.கி. கால்சியம் தேவை. இவர்கள் கால் லிட்டர் அளவு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
19-50 வயது உள்ளவர்களுக்கு :
இந்த வயதினர் 200 மில்லி லிட்டர் அளவுள்ள பாலினை குடிப்பது நல்லது. பால் மட்டுமில்லாமல், பால் சார்ந்த தயிர், மோர், யோகார்ட் ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
50 வயதினருக்கு மேல் :
50 வயதினருக்கு மேல் 200 மில்லி லிட்டர் அளவுள்ள பால் எடுத்துக் கொண்டால் போதும். எலும்புகள் தேயாமல் இருக்க ஒரு டம்ளர் அளவு பாலினை அவர்கள் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். 70 வயதினில் இருப்பவர்கள் 250 மில்லி லிட்டர் அளவு பால் குடிக்க வேண்டும்.
குறிப்பு :
பால் குளிர்கால சமயங்களில் எளிதில் ஜீரணமாகாது. ஆகவே பாலின் அளவை குறைத்துக் கொள்ளலாம். அதுபோல், இரவு தூங்கும் 2 மணி நேரத்திற்கு முன்னரே பால் குடிக்க வேண்டும்.
இல்லையெனில் ஜீரண பிரச்சனையை கொண்டு தரும். ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகமாகிவிடும். ஆகவே இரவில் பால் அருந்தியதும் உடனே தூங்கச் செல்லக் கூடாது.
0 comments:
Post a Comment