வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில்செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஊடகவியலாளர்கள் தொடர்புகொண்டு விடயத்தை தெரியப்படுத்திய பின்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இச்செயற்பாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலழிக்கையிலேயே மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் யார் யார் பங்குபற்றலாம் என்கிற விதிமுறையுள்ளது என குறிப்பிட்ட அவர் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள், இணைத்தலைவர்களான நான்கு அமைச்சர்கள், அரச திணைக்களக தலைவர்கள், அரச திணைக்களக உத்தியோகத்தர்கள் இந்த அமர்வில் கலந்துகொள்ள முடியும் என சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர் ஊடகவியலாளர்கள் மாவட்ட செயலகத்தால் அழைப்புவிடுக்கப்பட்டால் மாத்திரமே சமூகமளிக்க முடியும் என்பதுடன் அமைச்சர்களுடன் வரும் ஊடகவியலாளர்கள் மாத்திரமே ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தார்.
அரசாங்க அதிபரின் இக்கூற்று குறித்து கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களில் இல்லாத எதிர்க்கட்சி தலைவர்கள் எவ்வாறு கூட்டத்தில் பங்கெடுக்க முடியும் என கேள்வியெழுப்பியதுடன் ஊடகவியலாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களுக்கு அனுமதிக்க முடியாது என்ற அரசாங்க அதிபரின் கூற்றானது இந்த நல்லாட்சியில் ஜனநாயக விரோத செயல் என தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அமர்ந்திருந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அரசாங்க அதிபரின் கருத்திற்கு ஆதரவாக மௌனம் சாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment