பல விலங்குகளை கொலை செய்து இணையத்தளத்தில் வெளியிட்ட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
பன்வில காவற்துறையினால் இன்று காலை 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, விலங்குகளை கொலை செய்வதற்காக சந்தேக நபர்களினால் பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியை காவற்துறை கைப்பற்றியுள்ளது.
கண்டி பன்வில பிரதேசத்தில் உள்ள நக்கில்ஸ் வனாந்தரத்தில் இவர்கள் வேட்டையாடியிருப்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
0 comments:
Post a Comment