இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிமார்கள் நடந்துகொண்டதைப் போல் நடந்துகொள்ள தான் தயாரில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், தான் ஜனநாயகத்தையும் ஒற்றுமையையும் மதிக்கும் அனைவரதும் குரல்களுக்கு செவிசாய்க்கும் ஒரு ஜனாதிபதி எனக் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள ஜனாதிபதி, பிரதமருக்கும் கட்டுப்பட்டவரென முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், தான் இந் நாட்டின் பொதுமக்களுக்கு மாத்திரமே கட்டுப்படுவதாகத் தெரிவித்தார்.
அப்போதிருந்த ஏகாதிபத்திய ஆட்சி மக்களினால் நிராகரிக்கப்பட்டதன் காரணமாகவே தான் இந் நாட்டு ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், தான் அனைவரது குரல்களுக்கும் செவிசாய்த்து நாட்டின் தேவையின் அடிப்படையிலேயே தீர்மானம் மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.
இன்று (02) முற்பகல் தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின வைபவத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
இந் நாட்டின் கூட்டுறவு துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக புதியதொரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்’கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன் போது தெரிவித்தார்.
அவ்வாறே கூட்டுறவு சங்கங்களுக்கு 2017 – 2018 ஆம் ஆண்டுகளுக்காக சுங்கத்தீர்வைகளற்ற லொறி வண்டிகளை வழங்குவதற்கான பிரேரணையினை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக ஜாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
வெட் வரி முறைமை காரணமாக மக்களின் அன்றாட வாழ்வில் உருவாகியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கி தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு தற்போது பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து தெளிவான ஓரு தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு தான் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன் போது தெரிவித்தார்.
அரசு என்ற ரீதியில் ஒருபோதும் பொதுமக்கள் மீது சுமையினை சுமத்துவதற்கு தான் தயாரில்லை எனத்தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இன்று தேசிய பொருளாதாரம் எதிர்நோக்கியுள்ள முக்கியமான பிரச்சினையான கடன்சுமையை ஈடுசெய்தல், அந்நிய செலாவணி ஒதுக்கினை பலப்படுத்துதல் மற்றும் சென்மதி ஏற்றுமதி வர்த்தக நிலுவையினைக் குறைத்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு முறையான திட்டமிடலினூடாக தீர்வு காணப்படுமெனத் தெரிவித்தார்.
நாட்டை அபிவிருத்தி செய்ததாக யார் எதைக் கூறிய போதும் கடந்த பல ஆண்டுகளாக எமது உள்நாட்டு கைத்தொழில் துறை பாரிய பின்னடைவைச் சந்திக்க வேண்டி நேரிட்டதெனக் கூறிய ஜனாதிபதி அவர்கள், தேசிய பொருளாதாரத்திற்கு வலுசேர்த்து நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்பாகும் எனத் தெரிவித்தார்.
சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவரிடையெ இடம்பெற்ற சித்திரப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான சின்னங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.
ஜனாதிபதி அவர்களுக்கும் இதன் போது விசேட நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
கைத்தொழில் வாணிபத் துறை அமைச்சர் ரிஷாட் பதுர்தீன், இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, மத்திய மாகான முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கைத்தொழில் வாணிபத் துறை அமைச்சின் செயலாளர் ரீ.எம்.கே.பீ. தென்னகோன், இலங்கை தேசிய கூட்டுறவு சபையின் தலைவர் லலித் ஏ.பீரிஸ் ஆகியோர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment