யாழ், பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மற்றும் சிங்கள மாணவர்களுக்கிடையிலான நடந்த வன்முறை தமிழர்களின் எதிர்கால அரசிலுக்கு எழுச்சியா.??? வீழ்ச்சியா???
ஒரு சமுதாயத்தில் காலம் காலமாமாக அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு பின் பற்றிவரும் கலாச்சாரம், பண்பாடு காக்கப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை,
அதுபோல் அடுத்த சகோரத்து சமுதாயத்தின் பண்பாடுகளையும் மதிக்கப்பட வேண்டியது மனிதர்களின், தமிழர்களின் இயற்கையான இயல்பாக இருக்கவேண்டும்!!!
அந்த வகையில் யாழ்,பல்கலைக்கழக வளாகத்தினுள் நடந்த நிகழ்வு ஒன்றில் சிங்கள மாணவர்களின் கலாச்சார நடன, இசை நடந்ததாகவும் அது தவறு என்றும்,
தமிழ்பிரதேசத்தில் தமிழ் கலாச்சார வைபோகமே நடக்க வேண்டுமென்று தமிழ் மாணவர்கள் கேட்டதால் மென்முறை வன்முறையாக வெடித்தது!!!
சரி தவறிற்கு அப்பால் சம்பந்தப்பட்டவர்கள் தடுத்து நிறுத்த முயற்சியெடுக்காமல் எம்மை நோக்கி பல நூறு கிலோமீற்றர் கடந்து வந்த சிங்கள மாணவர்கள் மீது வன்முறையை பாய்ச்சுவதும், புலத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டும்,
வெள்ளையர்களுக்கு இணையாக எல்லா உரிமைகளையும் பெற்றுக்கொண்டும் நமது எதிர்காலத்தை கட்டியெழுப்பப் போகும் தமிழ் மாணவர்களுக்கு அறிவுரை சொல்லாமல் மாறாக,
அவர்களுக்கு உசிப்பேத்தி வாழ்த்துச்சொல்வதும், தலைவன் பிறந்த மண்ணடா, சினிமா நடிகையின் காலை நக்கிப்பிழைக்கும் கூத்தாடியான மேக்கிங்காந்தின் வசனமான நெருப்புடா, செருப்புடா என்று பொறுப்பில்லாமல் புலத்துப் புலம்பிகள் உளறுவது நல்லதல்ல,
அத்தோடு இன்று நாம் மிகவும் பலவீனமாகவே உள்ளோம் ஆகவே எமது மாணவர்களும் சிங்கள பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் சிறு குழுக்களாக சென்று படித்து வருகிறார்கள் எனவே அவர்களைப்பற்றியும் சிந்திக்கவும் !!!
இன்று ஆமை வேகத்தில் உலக நாடுகளின் ஆதரவோடு நகர்ந்து வரும் சமாதான,சமத்துவ, சகோரத்துவ அரசியல் தீர்வு முயற்ச்சிகளுக்கு சாவுமணி அடிக்கவேண்டாம்.
ஏனென்றால் அது புலத்தில் வசிக்கும் உங்களை ஒருபோதும் பாதிக்காது. எஞ்சியிருக்கும் எமது மக்களையும், கடந்த முப்பது வருடகால போரால் எமது மக்களின் கல்வி, பொருளாதாரம் வேரோடும் வேரடி மண் துகளோடும் சரிக்கப்பட்டுள்ளது என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டாமா???
சிங்கள மாணவர்கள் அதெப்படி தமிழ்பிரதேசங்களில் வந்து புத்த விகாரைகளை கட்டமுடியும் என்றால் சட்டவிரோதமாக கட்டினால் தவறு தவறு மகா மகா தவறாகும்!!!
அனுமதி வாங்கி கட்டுவதால் என்ன பாதகம் வந்து விடப்போகிறது???
அதைவிடுத்து இனவெறியைத் தூண்டும் வகையில் புலத்தில் உள்ள சருகுப்புலிகள் கேட்பீர்களாகயிருந்தால் நாம் உங்களைப்பார்த்து கேட்பேன் லண்டனில் 2009 க்கு பிறகு எப்படி 116 இந்துக் கோயில்களும், தமிழ் கிறிஸ்தவ தேவாலயங்களும் எப்படி வந்தது???
அது மட்டுமா ஜேர்மனி. பிரான்ஸ், டென்மார்க், நோர்வே, பிரான்ஸ், அவுஸ்ரேலியா, கனடா போன்ற இடங்களில் கோயிலைக்கட்டி கண்மூடித்தனமாக நிகழ்ச்சிகளை நடத்தி வருவதும் தமிழர்களே!!!
அப்பொழுது வெள்ளைக்காரன் உங்களை மதித்து இடளிக்கிறானே தவிர நீங்களெல்லாம் சுத்தமான சூசைப்பிள்ளைகள் என்பதற்காக அல்ல என்பதை சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும் பொறுமையாக!!!
இன்றும் இலங்கையின் தலைநகராக விளங்கும் கொழும்பில் பல தமிழ் கோயில்கள் நடத்தி வருவதும் தமிழர்களே அங்கு சிங்களவர்கள் வந்து உங்களை கண்டிக்கவில்லையே!!!
அத்தோடு தமிழர்கள் மீது இனவாத்தை தூண்டும் வகையில் தெற்கில் அனைத்து சிங்கள ஊடகங்களும் சிங்கள பாமரமக்கள் மீது உண்மைக்கு மாறான செய்திகளையும் வழங்கி தமிழ்ழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் சூழ்ச்சிகளும் நடந்து வருகிறது!!!!
இந்த நேரத்தில் தமிழ்ரகளாகிய அனைவரும் பொறுமை காத்து தங்கள் முகநூலில் முடிந்தளவு எமது மாணவர்களுக்கும், மக்களுக்கும் ஆலோசனையாக அறிவுரை சொல்லுங்கள்!!!
முஸ்லீம்கள் மீது கடந்த காலங்களில் சிங்கள பேரினவாதிகளால் மேற்கொண்ட அடக்குமுறைகளுக்கெதிராக தமிழர்கள் கிளர்ந்தெழுந்து ஆதரவு வழங்கினார்கள்!!!
இன்று தமிழ் மாணவர்களுக்கெதிராக சிங்கள சகோரத்துவ மாணவர்களால் மேற்கொண்ட வன்முறைகெதிராக தமிழ் முஸ்லீம் சமுகத்தால் சிறு அறிக்கை கூட விடாமல்,
தொடர்ந்தும் மௌனம் காப்பது தமிழர்களாகிய எமக்கு மனவருத்தத்தை தருவதோடு முஸ்லீம்களாகிய உங்கள் சுயநல போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்!!!!
0 comments:
Post a Comment