கண்டி பன்வில பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சாரதி ஒருவர் லொறியை ஓட்டிச்சென்றமையினால் பொலிஸார் லொறி மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
பல முறை லொறியை நிறுத்து என பொலிஸார் கூறியும் வாகனத்தை நிறுத்தாமையினாலேயேலொறி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
லொறியை சுடும் போது சாரதி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த லொறியில் இருந்து, சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட 5 எருமை மாடுகள் மற்றும் 10 காளை மாடுகள் என்பன பறிமுதல்செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment