வவுனியாவில் அண்மைகாலங்களாக மாடுகளை களவாடி இறச்சிக்காக விற்பனை செய்த கும்பலை சார்ந்த இருவரை வவுனியா குற்றப்புலனாய்வு பிரிவினர் 28.06 2016 அன்று கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இருவரும் 14 நாட்கள் பிணைகளற்ற விளக்க மறியலில் வைக்க வவுனியா நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
வவுனியா பட்டானிசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
மாட்டிறச்சியுடன் கைது செய்யபட்ட முதலாவது சந்தேகநபர் கொடுத்த வாக்குமூலத்திற்கு அமைய பிரதான சந்தேகநபர் கைது செய்யபட்டுள்ளார்
பிரதான சந்தேக நபரின் வீட்டுக்கருகாமையில் சட்டவிரோதமாக மாடுகளை அறுத்து விற்பனை செய்யும் தடையங்களை வவுனியா பொலிசார் கண்டுபிடித்துள்ளதாக பொலிசார் தெரித்துள்ளனர்
பிரதான சந்தேக நபருக்கு அரசியற்பலம் பின்ணணியில் இருப்பதாகவும் இவர் தேசிய அரசியற் கட்சியொன்றின் பட்டானிச்சூர் கிளைகாரியாலையத்தில் மக்கள் தொடர்பாடல் மற்றும் கட்சியின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றவர் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
இதே வவுனியா நகர பகுதியல் சட்ட ரீதியாக மாடு அறுக்கும் தொழுவம் ஒன்று உள்ளதும் குறிப்பிடதக்கது இதன் உரிமையாளர் குறிப்பிடுகையில் சட்டவிரோதமாகவும் கிராம வாசிகளின் மாடுகளை களவாடி மாடுகளை அறுத்து விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என தெரிவித்தார்
0 comments:
Post a Comment