வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகம் நடத்திய, பிரதேச மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலையும் மனைப்பொருளியலுக்குமான மாவட்டக் கண்காட்சி இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி பாரதி இஸ்டார் கொட்டலில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சுனேத்ரா சுதாகர் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது.
கண்காட்சி நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண வர்த்தக வாணிபம், கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களும்
சிறப்பு விருந்தினராக வடமாகான கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் சி.பெலிசியன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலாளர்களான கோ. நாகேஸ்வரன், ப.ஜெயராணி, த. முகுந்தன் ச . கிரஷ்னேந்திரன் மற்றும் கிராம அபிவிருத்தச் சங்கங்களின் சமாசத் தலைவர் க. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியை இன்று மாலை 4.30 வரைக்கும் பார்வையிட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்
0 comments:
Post a Comment