வடக்கு ஊடகவியலாளர்கள் இன்று (07) பாராளுமன்றில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தனர்.
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கையும் தெற்கையும் இணைக்கும் நல்லிணக்கப் பிரயாணத்தின் இரண்டாம் கட்டமாக வடக்கு ஊடகவியலாளர்கள் தெற்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன் இதன் ஒரு கட்டமாக அவர்கள் இன்று பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தனர்.
இதன் போது அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்ததுடன் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஊடகத் துறையின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அவர்களுக்கும் பிரதமர் அவர்களுக்கும் விளக்கமளித்தனர்.
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment