இன்று காலை 10.20மணியளவில் யாழ் பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து இ.போ.ச சாரதிகளால்
tnnlk.com(தமிழ் தேசிய செய்திகள்) ஊடகவியலாளரான வவுனியாவை சேர்ந்த பா.சதீஸ் என்பவர் மீது தாக்குதல் முயற்சி..
மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது
இன்று யாழில் இடம்பெறவிருக்கும் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றிற்காக வவுனியாவிலிருந்து இன்று காலை 7.30மணியளவில் வவுனியா அரச பேருந்து நிலையத்திற்கு சென்ற ஊடகவியளாலர் அங்கு தரித்து நின்ற அரச பேருந்தின் சாரதியிடம் எப்போது பேருந்து புறப்படும் என்று வினாவியபோது 7.40மணியளவில் புறப்படும் என்று வினாவியபோது 07.40மணியளவில் என்று கூறியதும் ஊடகவியளாலர் தண்ணீர் வாங்குவதற்காக கடைக்கு சென்றதும் பேருந்து 7.33 மணியளவில் புறப்பட்டுள்ளது எனினும் இதை திடீரென அவதானித்த ஊடகவியலாளர் சக ஊடகவியலாளரும் பேருந்தை துரத்தி சென்று வவுனியா தபால் கந்தோருக்கு முன்பாக வைத்து பேருந்தை வழிமறித்து பேருந்தில் ஏறியுள்ளனர். பின்னர் 10.20 யாழ் பேருந்து நிலையத்தை பேருந்து வந்தடைந்ததும் ஊடகவியலாளர் பேருந்தை புகைப்படம் எடுத்துள்ளார்.
அவ்வேளையில் அங்கு நின்ற இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஊடகவியளாலர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளனர். எனினும் அதிலிருந்த சில நபர்களால் அங்கிருந்து அவர்களை பிரதான வீதிக்கு அழைத்து வந்து முச்சக்கர வண்டியில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர் மேலும் ஊடகவியலாளர்கள் யாழ் பிரதான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு இட்டதன் பிரகாரம் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி சுமூகமாக்கி விட்டனர்.
0 comments:
Post a Comment