வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கெளரவ .அன்ரனி
ஜெகநாதனின் இன்று காலை மாரடைப்பு காரணமாக அகால மரணமடைந்துள்ளார்
ஒரு கல்வியலாளராக போர் சூழ்ந்து எமது வன்னி நிலம் வதையுற்ற காலத்தில் மாணவர்களின் நிமிர்வுக்கு அயராது உழைத்த ஆன்மா இன்று எம்மை விட்டு நிரந்தரமாக ஓய்ந்துள்ளது.
எமது மண்ணின் காயங்களின் அர்ப்பணிப்புக்களின் இழப்புக்களின் நினைவுகள் அப்படியே ஆழப்பதிந்த ஆணிபோல அவர் நெஞ்சில் பதிந்திருந்தது அரசியல் பயணத்தில் கோபங்களுக்கும் காரணமாய் இருக்கலாம்.விடுதலைப் பயணத்தில் பங்காளியாயும் பயணியாயும் இறுதிவரை இருந்தவர்களின் வார்த்தைகளுக்கு அன்ரனி ஜெகநாதன் அவர்களும் சாட்சி.கனன்று கொண்டிருக்கும் எரிமலைப் பிழம்புகளில் ஒன்று அணைந்தது.நாட்டுப் பற்றாளனுக்கு எமது ஆழ்ந்த வணக்கம்.
0 comments:
Post a Comment