பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களின் திட்டத்தின் கீழ் பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின்
வழிகாட்டலில் கிராமம் தோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாற்பது நாள் வேலைத்திட்டத்தின் இறுதிநாளான இன்றைய தினம் (10.12.2016) ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவேலர் பூவரசங்குளம் கிராமத்தில் சமுதாய பொலிஸ் திட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஓமந்தை பொலிஸ் அதிகாரி இந்திக்க சுரேஷ் அன்ரனிஷ்தசில்வா தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வு இடம்பெற்றது.
ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40 நாள் செயற்திட்டத்தின் இறுதி நாளை இன்றைய தினம் கொண்டாடியதுடன் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையிலான ஒற்றுமையை பேணு முகமாகவே இன் நிகழ்வு நடைபெற்றது.
நடமாடும் மருத்துவ முகாம, சிரமதானப்பணிஇபாடசாலை மாணர்களுக்கிடையிலான போட்டிகள் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் பங்கு பற்றி வெற்றி ஈட்டியவர்ளுக்கான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
ஓமந்தை பொலபிரிவிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள மிகவும் வறுமை கோடடிற்குட்பட்ட கற்பிணி பெண்களுக்கான போசாக்கு பொருட்கள் போன்றன பொலிசாரினால் வழங்கி வைக்கப்பட்டன.
இன் நிகழ்வில் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வெல்கம, வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா, ஓமந்தை பிரதேசத்துக்குட்பட்ட கிராம சேவகர்கள், மதகுருமார்கள்ஓமந்தை பிரதேச வைத்திய அதிகாரி செ.மதுரகன், பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment