மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அருகில் இளைப்பாறப் போகிறார் புரட்சித் தலைவி ஜெயலலிதா.
இனியாவது இரு முக்கிய பிரமுகர்கள் மத்தியில் அமைதியாய் இளைப்பாற இறைவனை வேண்டுகிறோம்.
சென்னை அப்போலோவில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது உடல் போயஸ் கார்டனிலுள்ள வேதா இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது.
அப்போலோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் வரை சாலையின் இருமருங்கிலும் நின்றிருந்த பொதுமக்கள் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்தபின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மக்கள் கண்ணீரில் வெள்ளத்தில் மிதக்கும் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் இறுதி அஞ்சலி ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டு மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
தனது இதயத்தில் எம்ஜிஆர்க்கு இடம் கொடுத்த அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் இறந்த போது தனக்கு அருகில் இடம் கொடுத்தார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் மனதில் இடம் பிடித்த கலை நாயகி ஜெயலலிதா, வாழும் வரை தனக்கென்று குடும்பமே இல்லாமல்..மக்களையே தனது குடும்பமாக நினைத்து வாழ்ந்த அம்மா ஜெயலலிதாவுக்கு இன்று தன் அருகில் இளைப்பாற இடம் கொடுத்துள்ளார் எம்ஜிஆர்.
மக்கள் இளைப்பாற வரும் மெரீனா கடற்கரையில் இனி மூன்று முப்பெரும் தலைவர்களும் இளைப்பாற போகிறார்கள்.
0 comments:
Post a Comment