உயர் தரம் சித்திப்பெற்ற மாணவர்களுக்கு ஒரு பட்டதாரியின் அழுகை குரல்! சரியா? தவறா?

ஒரு பல்கலைகழக மாணவன் தற்போது இடம்பெற்று முடிந்த உயர்தர பெறுபேறுகளில் சித்திப்பெற்ற மாணவர்களுக்கு கூறும் அறிவுரை ஒன்று
சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.. . குறிப்பாக பட்டதாரிகளின் தற்போதைய உண்மை நிலைமையினை கூறுவதாக குறித்த மாணவ்ன் தெரிவித்துள்ளான்.  இக்கட்டுரையினை வாசித்து இக்கட்டுரை தொடர்பான உங்களது விமர்சனங்களை தெரிவிக்கலாம்…
க.பொ.த(உ/த) பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்….இவர்களின்
வெற்றிக்கு ஊன்றுகோலாக இருந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்…..
சித்தி எய்த மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மாணவர்கள் இனிமேல்தான் விழிப்பாகவும்,அவதானமாகவும் இருக்கவேண்டும்……
கலைத்துறையில் சித்தி எய்த மாணவர்கள் முடிந்தவரை பல்கலைக்கழகம் செல்லும் எண்ணத்தை தவிர்த்து கல்வியல் கல்லூரிக்கு செல்வது நன்று. அதுவே நாம் பாடுபட்டு படித்ததற்க்கான பலனையும்,மனமகிழ்வினையும் ஏற்ப்படுத்தும்.
அம்மா சொன்னா,அப்பா சொன்னா, சகோதரங்கள் சொன்னார்கள்,நண்பன் சொன்னான் என்பதற்காகவெல்லாம் பல்கலைக்கழகம் செல்லவேண்டாம். இப்படி மற்றவர்களின் கதைகேட்டு போன முட்டாள்களின் எண்ணிக்கை அதிகம்…….. இதே விடயம் சிலருக்கு எதிர்மாறாக இடம்பெறலாம் பெற்றோர்கள்,சகோதரர்கள்,நண்பர்கள்,ஆசிரியர்கள் கல்வியல்கல்லூரி போகச்சொன்னால் அதை ஏற்று நடங்கள்….. மாறாக “நான் படித்தது பல்கலைக்கழகம் செல்லத்தான்,அதுதான் எனது நீண்டநாள் ஆசை கனவு என பக்கம் பக்கமாக வசனம் பேசி உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளாதீர்கள்.(அன்று சொன்னார்கள்…கேட்க்காததால்… இன்று அவஸ்த்தைப்படுகின்றேன்)
உங்கள் பெயருக்கு பின்னால் பட்டம் வர வேண்டுமென விரும்பினால் கல்வியல் கல்லூரி முடித்தபின் வெளிவாரியாக பட்டம் முடித்துக் கொள்ளுங்கள்(அதுதான் மிக மிக இலகுவானது..வரவு பார்க்கப்படமாட்டாது, ரியூட் போடவேண்டியதில்லை, முழுநேரம் வகுப்புக்கள் இல்லை, பணச்செலவு குறைவு,வீட்டுச்சாப்பாட்டுடனே பட்டம் பெற்றுவிடலாம்)
தவிர்க்கமுடியாத சந்தர்பங்கள் காரணமாகபல்கலைக்கழகம் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டால்…முடிந்தவரை பல்கலைக்கழகங்கள் புதிதாக அறிமுகம் செய்கின்ற,உடனடி தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள கூடிய பாடங்களை தேர்வு செய்தல் புத்திசாலித்தனம்.
A/Lலில் அழகியல் பாடங்களில் ஒன்றை பாடமாக கற்ற மாணவர்கள்…..மிக…மிக கவனமாக இருத்தல் வேண்டும். பல்கலைக்கழகத்தில் அழகியல் பாடங்களை பிரதானபாடங்களாகவோ,சிறப்பு கற்க்கையாகவோ பயில வேண்டாம்(பட்டறிவு) அழகியல் பாடங்கள் மனதிற்கு அழகியல்,ஆனந்தங்களை உண்டு பண்ணும் என்பது மறுக்கமுடியாத உண்மை……. இவை படிக்கும்போது உச்ச குதுகலம், மகிழ்வு,களியாட்டங்களை உண்டு பண்ணும் ஆனால் படித்து முடித்து வேலை தேடும்போது உச்சக்கட்ட துன்பத்தை கொடுத்து….ஏளனப்படுத்தும்( அனுபவித்தவன்)
“ஈன்றபொழுது பெருதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்”…..
எந்தப் பெற்றோரை எடுத்துக் கொண்டாலும் தன் மகன் பல்கலைக்கழகம் செல்லவேண்டும் பட்டம் பெறவேண்டும் என்பதுதான் யதார்த்தமான உண்மை…. என்ன செய்வது???????????? பல்கலைக்கழகமா!!!!!!!!வேண்டாமப்பா!!!என்று சொல்லும் நிலையாகி விட்டது…
ஏன் எனில் நம் நாட்டின் நிலை அப்படியாகிவிட்டது . இன்று இலங்கை முழுவதும் 31,000 க்கு மற்பட்ட பட்டதாரிகள் வேலையற்று உள்ளனர்……அவ்வாறு வேலைகள் செய்தாலும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை செய்வோர் எத்தனைபேர்??????????
சிந்தியுங்கள் !!!இனி நீங்கள் வைக்கின்ற ஒவ்வொரு அடிகளும் பயனுள்ளவைகளாக அமையவேண்டும்……இனியும் எம் நாட்டில் மூடர் கூட்டத்தின் எண்ணிக்கையை கூட்ட வேண்டாம்
பட்டறிவு பெற்று கூறுகிறேன்……..
என அமையப்பெற்றுள்ளது.
இருப்பியும் இக்கட்டுரையானது குறித்த மாணவனின் தனிப்பட்ட  ஒரு கருத்தியலாகவே  எடுத்துக்கொள்கின்றது.. காரணம் பல்கலைகழக படிப்பனை  நிறைவு செய்துவிட்டு இலங்கையில் சாதித்த பலரும் எம்மில் இருக்கத்தான் செய்கின்றார்கள்..இன்று அரசின் முக்கிய தொழிற்துறையில் இருப்பவர்கள் பலர் இலங்கையில் படித்து பட்டம் பெற்றவர்களே..  குறிப்பாக இலங்கையின் தற்போதைய நிலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு மறுப்பு, மற்றும் பட்டதாரிகளின் போராட்டம் என்பன ஒரு வகையில் பல்கலைகழகம் செல்ல வேண்டுமா என்ற கேள்வியினை ஏற்படுத்தியிருந்தமையும் விமர்சன ரீதியான உண்மையாகும். குறிப்பாக கலை பட்டதாரிகளை பொருத்தவரை இந்நிலை நீடித்தாளும், ஏனைய பட்டங்களை பெறுகின்றவர்களுக்கு இம்மாணவனின் கருத்து பொருத்தமானதா? என்பது கேள்விக்குறியாகும்…
Thank battinow

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com