குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகும் அதிர்ஷ்டம் உள்ள ராசிகள் எது?

பணக்காரர் ஆவதற்கு அதிர்ஷ்ட்டம் வேண்டும் என்பார்கள், அந்த அதிர்ஷ்ட்டம் உங்கள் ராசி செல்வாக்குச்
செலுத்துகின்றது. கடின உழைப்பு மாத்திரமே உங்களை பணக்கரான் ஆக்கிவிடாது. பலரின் கடின உழைப்புக்கள் வீணாகிப் போகும் பல சந்தர்ப்பங்களை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.


அந்த வகையில், உங்கள ராசிக்கு நீங்கள் சொத்து சேர்க்கும், பணக்காரர் ஆகும் யோகம் உள்ளது என்பது தொடர்பில் பொதுவாக அறியலாம்.


மேஷம்
மின்னல் வேகத்தில் முன்னணிக்கு வருவதில் மேஷ ராசிக்காரர்களுக்கு இணையானவர்கள் யாரும் இல்லை. எதிலுமே வெற்றி பெறும் யோகம் கொண்டவர். புத்திசாலித்தனமாக எந்த காரியத்தையும் உற்று நோக்குவதால் எல்லா பணிகளிலும் லாபம் கிட்டும். இவரது பணப்புழக்கம் மிகச் சிறப்பாக உள்ளது.


ரிஷபம்
இந்த ராசியில் பிறந்தவர் வேலையில் முழு மனதுடன் உழைப்பவர், பணத்தை கடவுளாக நினைப்பவர். இவரிடம் பணம் தங்காது. எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அவ்வளவு செலவு ஆகும். பணம் சம்பாதிப்பதில் வல்லவர், மற்றவரிடம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துபவர். இதனால் இவர் சுயநலவாதியாக இருக்கிறார். ரிஷப ராசிகாரர்கள் பணக்காரனாக முடிவதில்லை.



மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் பணப்புழக்கம் அதிகமாகவும் இருக்காது, பற்றாக்குறையும் ஏற்படாது. பிறப்பு முதல் இறப்பு வரை இவர்களது பணப்புழக்கம் ஒரே சீராக இருக்கும்.



கடகம்
இவர்கள் அதிகம் பயணிப்பவர்களாக இருப்பர். கணவராக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் குடும்ப பொருளாதாரத்தை ஒப்படைத்துவிடுவர். பயணத்தால் இவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். 14, 26, 30 வயதுகளில் இவர்கள் நல்ல யோகத்தை பெறும் வாய்ப்பு உண்டு. பணத்தை சேமிக்கும் எண்ணம் இருக்கும். பணத்தை சம்பாதிக்க பாடுபடுவர். பணத் தட்டுப்பாடு இருந்து வரும்.


சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் பணப்புழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். எப்போது தேவைப்பட்டாலும் இவர்களுக்கு பணம் கிடைத்துவிடும். இவர்கள் பணத்தை செலவழிக்க பயப்படுவர். செலவு ஏற்பட்டாலும் அதை நினைத்து கவலை கொள்வர். பண வரவு இவர்களுக்கு இருந்தாலும், அதற்கேற்ப செலவும் இருக்கும்.
பணத்தை சேமிப்பது இவர்களுக்கு எளிதானதல்ல. இவர்கள் வீட்டில் திருடு போகவும், பொருள் காணாமல் போகவும் வாய்ப்பு உண்டு. பொருட்களை மறந்து வைத்துவிடவும் வாய்ப்புண்டு. இவர்கள் வீட்டில் ஏதேனும் மிருகமோ அல்லது பறவையோ வளர்ப்பது நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பவர். பணத்தினுடை மகத்துவத்தை நன்றாக புரிந்து கொள்பவர். பணத்தை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என விருப்பமுடையவர். மனை வாங்கும் விஷயத்தில் பணம் செலவழித்தால் வெற்றி பெறுவர். நினைத்ததை ஆலோசிப்பர். எல்லா பொருட்களையும் தானே இஷ்டப்பட்டு வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
துலாம்
வியாபாரத்தில் இவர்களுக்கு அதிக லாபம் கிட்டும். இவர்களது குணநலத்தின் காரணமாக எந்த காரியத்தை செய்தாலும் அதில் இவர்களுக்கு அதிக லாபம் விரைவிலேயே கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இவர்களது பணவரவு நன்றாக இருக்கும்.
விருச்சகம்
விருட்சிக ராசிக்காரர்களின் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆனால் அதற்கு கடின உழைப்பு அவசியம். செலவை குறைப்பது நல்லது. எந்த காரியத்தையும் முழுவதுமாக முடித்தால் பண வரவு நிச்சயம். எங்கே சென்றாலும் அங்கிருந்து பணம் வரும். பணவரவால் மகிழ்ச்சி காண்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் கொடுக்கல் – வாங்கல், வாங்குதல்-விற்றல் எல்லாமே இழுபறியாக இருக்கும். இவர்களுக்கு அதிகம் செலவாவதால் சேமிக்க இயலாது. இவர்களது வாழ்நாளில் ஒரு பெரும் செலவு செய்யும் வாய்ப்புண்டு. ஏமாற்றப்படவும் வாய்ப்புண்டு. பணம் இருந்தால்தான் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தான் சம்பாதிக்கும் பணத்தை தனக்காகவே செலவழிப்பர். பணம் செலவாவதைக் கண்டு கண்ணீர் வடிப்பர்.
மகரம்
தனது திறமையால் தனது லாபத்தை பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர். எந்த தொழிலை செய்தாலும் நஷ்டம் அடைய மாட்டார்கள். தர்மம் செய்ய அஞ்சமாட்டார்கள். இவர்களது செலவை குறைக்க முடியாது. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே பாதி நேரம் செலவழியும். சாதாரண பண நடமாட்டம் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்களது வீட்டு செலவைக் கூட புத்திசாலித்தனமாக குறைத்துவிடுவர். இவர்களுக்கு நண்பர்களை விட எதிரிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். இவர்களுக்கு அசையும்-அசையா சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உள்ளது.
எப்போதும் பண நடமாட்டம் இருக்கும் நபராகவே கும்ப ராசிக்காரர் திகழ்வார். கும்ப ராசிக்காராக்ளுக்கு 25 வயதில் இருந்தே யோகம் ஆரம்பிக்கிறது. 25, 28, 40, 45, 51 மற்றும் 63ஆம் வயதுகளில் இவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். எனினும் சிறப்பான யோகம் ஏதும் கும்ப ராசிக்காரர்களுக்கு இல்லை. செலவை குறைக்க வாய்ப்பும் இல்லை. ஆனால், சொத்து சேரும் யோகம் உண்டு.
மீனம்
இந்த ராசிக்காரர்கள் பணத்தை அவர்களே சம்பாதிப்பார்கள். லாட்டரி, இடம் வாங்கி விற்பதில் அதிக நஷ்டம் உண்டாகும். அப்படி இருந்தாலும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் பணம் குறையாது. பணம் தேவைப்பட்டால் உடனடியாக கிடைக்கும். பணம் இவர்களுக்கு சாதாரணமான ஒன்று. வெற்றியும் உண்டாகும். மீன ராசிக்காரர்கள் வாங்கும் இடங்களில் அதிக கஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரங்களில் ஏற்ற தாழ்வு நிகழும்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com