வவுனியாவில் கடந்த 25ஆம் திகதி இணையதளங்கள் இரண்டில் ஊடகப்பணியாளர் ஒருவருக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு பரப்பி
செய்திகள் வெளியிடப்பட்டது.
இதையடுத்து 26ம் திகதி செய்தி வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களுக்கும் இணையதளங்களுக்கும் எதிராகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸ் நிலையத்திற்கு இன்று விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட மூன்று நபர்களில் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையின்போது பகிரங்க மன்னிப்புக் கோரினார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
கடந்த 25ம் திகதி வவுனியாவிலுள்ள ஊடகப்பணியாளர் ஒருவருக்கு எதிராக செய்தி வெளியிட்டதுடன் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து பணியாற்றுவதாகவும் கப்பம் கோரி செய்திகள் வெளியிடுவதாகவும் உறவினர்களிடம் சென்று ஊடகவியலாளர்களின் தகவல்கள் திரட்டுவதாக செய்தி புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து குறித்த ஊடகப்பணியாளர் இவ்வாறான செய்தியால் தனக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆதாரமற்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்து 26ம் திகதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டார்.
செய்தி வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் மூவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது குறித்த செய்திக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று ஆரம்ப விசாரணகளின்போது தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைக்கு விசாரணை மாற்றப்பட்டது. பொறுப்பதிகாரியின் கடுமையான விசாரணையின்போது மூவரில் ஒருவர் செய்தி வெளியிட்டதை ஒப்புக்கொண்டதுடன் முறைப்பாடு மேற்கொண்டவரிடம் பகிரங்க மன்னிப்பும் கோரினார்.
குறித்த இரண்டு இணைய தளங்களில் மறுப்பறிக்கை செய்தியினை வெளியிடுமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment