ஈரோஸ் மீளாளுமை ஒருங்கிணைப்பு கூட்டம் உயர்மட்ட அமர்வு. கடந்த
14.07.2018 சனிக்கிழமை அன்று பூந்தோட்டம் தலைமை காரியாலையத்தில் இடம்பெற்றது.ஈரோஸ் அமைப்பை மீள்கட்டுமானம் செய்வதற்காக ஒழுங்கு செய்யபட்ட குறித்த அமர்வில் வடக்கு, கிழக்கு, மலையகம், மற்றும் புலம்பெயர் தேசத்து மூத்த தோழர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மீள்கட்டுமானம் செய்யும் பொருட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. மாவட்ட ரீதியாக மத்தியகுழு அமைக்கும் பொருட்டு மூவர் வீதம் தெரிவுசெய்யபட்டிருந்தார்கள்.
ஈராஸ் அமைப்பின் பொதுச்செயலாளராக திரு எஸ் துஸ்யந்தன் அவர்கள் தெரிவு செய்யபட்டார். இணைச்செயலாளராக திரு ஏ இ ஈராஜநாயகம், திரு சிறி இராஜராஜேந்திரா, மற்றும் திரு ஆர் ஜீவன் ஆகிய மூவரும் செய்யபட்டதுடன். நிதிப்பொறுப்பிற்காக திரு கே சிறிஸ்கந்தராஜா அவர்களும் தெரிவு செய்யபட்டிருந்தார்
ஈரோஸ் அமைப்பின் முதலாவது பொதுச்செயலாளராக திகழ்ந்த திரு க வே பாலகுமார் அவர்களை தொடந்து, இரண்டாவது பொதுச்செயலாளராக திரு துஸ்யந்தன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment