இன்றைய தினம் வவுனியா வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த கனகராயன்குளம், பெரியகுளம், ஆலங்குளம், நெடுங்கேணி, ஒலுமடு, புளியங்குளம் வடக்கு,
குறி சுட்ட குளம், மற்றும் மதியா மடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 130 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதி ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.
அரிசி கோதுமைமா சீனி நெத்தலி தேயிலை சோயாமீற் போன்ற அத்தியவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியே இவ்வாறு வழங்கப்பட்டது.
ஈரோஸ் துஸ்யந்தனின் நிதியுதவியுடன் அமைப்பின் ஊடகப்பிரிவு ஊடாக குறித்த பிரதேசங்களை மையப்படுத்துகின்ற . அமைப்பினது இளைஞர் அணியால் வழங்கிவைக்கப்பட்டது.
பெரியகுளம்561 இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள பெரியகுளம் மக்கள் இந்த சூழ்நிலையில்(ஊரடங்குகாலத்தில்) உண்பதற்கு உணவுகள் ஏதுமின்றி இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள வேலிகளில் உணவிற்காக கையேந்திநிகவும். அதற்கு இராணுவத்தினர் தங்களுக்கு வழங்கப்படுகின்ற சமைத்தஉணவுப் பொதியில் இருவர் ஒரு உணவுப் பொதியை பகிர்ந்துண்டு அவர்களுக்கு உணவைக் கொடுக்கின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் மக்களது நிலமைகளை கருத்திற் கொண்டு கனகராயன்குளம் இளைஞர் அமைப்பின் வேண்டுகேளுக்கிணங்க குறித்த கிராமமக்களுக்கும் (28 குடும்பங்கள்) இன்று உலர் உணவு பொதிகள் முதல்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment