ஒரு முறையான உறுதியான தொழில் அலகுகளை கொண்ட மலையக பெருந்தோட்டங்கள் உருவாகினால்தான் பெரும் தோட்டங்களில் எதிர்வரும்காலங்களுக்கு
மக்கள் முகம்கொடுக்கமுடியும் எனவே குடிமக்களை காப்பாற்றுவதே அவர்கள்சார்ந்த தலைவர்களுடைய கடமை என உணரமுடிகிறது.
கொரன்ன வைரஸை எப்படி எதிர்கொள்வது என்று பல இனத்தவர்களும் பல மொழி பேசுபவர்ககளும் திண்டாடும் பட்சத்தில் இனி வரும் காலங்களை மலையகமக்கள் எப்படி சமாளிப்பது என்பது கேள்விகுறியே?
எனவே மலையகத்தலைவர்கள் தமது கட்சிபேதங்கள் பிடிவாதப்போக்குகளை மறந்து இன்றுள்ள நாட்டின் சூழலை மனதில் கொண்டு ஒரு தூர நோக்கோடு தோட்ட தொழிலாள மக்களுக்கு மாத சம்பளத்தை உடன் அமுலுக்கு வரும்படி சகல தோட்ட கம்பனி முதலாளிமார்களுக்கு அறிவுறுத்துவதோடு தோட்ட தரிசு நிலங்களில் தொழில்பேட்டைகள் விவசாயம் நன்னீர் மீன்வளர்ப்பு, தானிய வகைகள் உற்பத்தி போன்ற இன்னும் பல அபிவிருத்திகளை தோட்ட பகுதிகளில் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கும், தொழில் அற்றவர்களுக்கு பகிர்தளிக்கும்படியும் தோட்டபிரிவுகள் தோறும் பலநோக்கு கூட்டுறவு சங்க கடைகள் அமைக்கும் படியும் தோட்டங்கள் தோறும் முடக்கப்பட்டுள்ள சில தோட்ட வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு மக்களுக்கு வைத்தியசேவை வழங்குவதும் தோட்ட குடியிருப்புகளுக்கு கடந்த காலங்களை போல் மருந்து தெளித்தால் துப்பரவு பணிகள் தினம்தோறும் நடைமுறையில் வரும்படியும் அரசு வழங்கும் நிவாரணம் பணிகள் மலையக மக்களான தோட்டங்களில் தொழில் புரியும் மக்கள்கள் மற்றுமின்றி ஹோட்டல்கள், உல்லாசவிடுதிகள் ,கடைகள்,முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் ஏனைய தொழில் புரிபவர்கள் தோட்ட உத்தியோகத்தர்கள் போன்ற அனைவருக்கும் பாரபட்சமின்றி உடனடியாக வழங்க தோட்ட கம்பனிகள் நடவடிக்கை எடுக்கபடவேண்டும்.
1972 ஆண்டு பகுதியில் நடந்த சம்பவங்களையும் வறுமைகளையும் மலையக மக்கள் மறக்க கூடாது வீட்டுதோட்டங்ககள், கைத்தொழில்கள், வேறுவகையான தத்தமது தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறோம்.
அத்தோடு தோட்டங்களில் இருக்கும் தரிசு நிலங்களில் தொழில்பேட்டைகள் அமைத்து கடுமையான உழைப்பாளர்கள் என்று எல்லோராலும் கருதப்படும் தோட்ட தொழிலாளர்களான அவர்களது எதிர்கால சந்ததிகளை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதே எமது கொள்கையின் நோக்கமாகும்.
என்றென்றும் தோழமையுடன்
சிவனையா செல்வராஜா
ஈழபுரட்சி அமைப்பு (EROS)
0 comments:
Post a Comment