கடந்த பல வாரங்களாக நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் அனைவரும் நிலைகுலைந்து காணப்படும் இத்தருணத்தில் ஊரடங்கு சட்டங்கள் ஊடக பொருட்கள் கொள்வனவு மற்றும் ஏனைய தேவைகள் நிமித்தம் மக்கள் தடுமாறி
கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தோட்ட புறங்களில் ஒரு சில தோட்டங்கள் தவிர பெரும்பாலான தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றுள்ளார்கள்.
அன்றாட கூலி தொழிலே இதற்கு காரணமாகும். எனவே சம்பள உயர்வு சம்பந்தமாக சாக்கு போக்கு சொல்லிக்கொண்டிருக்கும் தோட்ட கம்பெனிகளுக்கு கடுமையான அழுத்தத்தை அரசும் தொழிலாளர் தொழிற்சங்கங்களும் கொடுக்க இவ்வறிக்கை
ஊடாக கேட்டு கொள்கின்றோம்.
1985 ஆம் ஆண்டுக்கு முன்பதாக மலையக மக்கள் உரிமையற்றவர்களாகவும், வாக்குரிமை அற்றவர்களாகவும் இருந்த போது அனுபவித்த சொல்லெனா துன்பங்களையும், வேதனைகளையும் இனி ஒரு போதும் அனுபவிக்க கூடாது என்பதில் மிக உறுதியான நிலையில் உள்ளோம்.
இந்த கசப்பான காலங்களின் நடவடிக்கைகளை மாற்றி அமைத்து சகலருக்கும் பிரஜா உரிமை மற்றும் வாக்குரிமை வழங்குமாறு திம்பு பேச்சுவார்த்தை ஊடக பெற்றுக்கொடுத்த எமது கட்சியை (ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) இந்நாட்டின் மக்கள் குறிப்பாக மலையக மக்கள் மறந்திருக்க மாட்டர்கள்.
இதை கருத்திற் கொண்டு தினந்தோறும் வேலை வேறு வழியில்லை என கம்பனிகள் காரணம் கூறுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போதைய நிலைமையில் மக்களின் சுகாதாரரத்தை மேம்படுத்தி அவர்களை பாதுகாப்பதில்
தீவிர கவனம்
எடுத்து அத்தியாவசிய பொருட்கள், உலர் உணவு வகைகள், முன்கூட்டிய கொடுப்பனவுகள் போன்றவற்றை வழங்க உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அதே நேரத்தில் இந்த கட்டாய செயற்பாட்டில் தோட்டங்களில் வசிக்கும் தோட்ட சேவையாளர்களையும் உள்ளடக்க வேண்டும்.
தற்போது நாட்டின் அபாயகரமான பிரச்சனையாக
மாறியுள்ள கொவிட் 19 (கொரோனா) தொற்றானது பாரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற படியால் தோட்ட தொழிலாளர்களை சிறத்தையுடன் பாதுகாக்கும் அதே வேலை தோட்ட சேவையாளர்களை குறிவைத்து இக்காலகட்டத்தில் தோட்ட கம்பனிகளால் மேற்கொள்ளப்படும் சுயநல வேலை திட்டங்களையும் உடனடியாக நிறுத்துவதுடன் அரசாங்கத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக இதனை தடுக்கும் வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். எனவே குறித்த கம்பனிகள் வேலை பணிப்பு வேறு மற்றும் வேலை திணிப்பு வேறு என்பதை
இக்காலகட்டத்தில் புரிந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
என்றென்றும் தோழமையுடன்
சிவனையா செல்வராஜா
அமைப்பாளர் மலையகம் ஈழபுரட்சி அமைப்பு (E.R.O.S)
0 comments:
Post a Comment