லண்டனில் பொறியியலாளராக பணிபுரியும் மகனை பார்க்க விரும்பும் கைதடி முதியோர் இல்ல தாய்

kaithady- muthiyor illamலண்டனில் பொறியியலாளராக பணிபுரியும் தன் மகனை பார்க்க விரும்பும் யாழ்ப்பாணம், கைதடி முதியோர் இல்லத்திலுள்ள தாயொருவர் முதியோர் இல்ல அதிகாரிகள் மற்றும் உறவினர்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
கைதடி முதியோர் இல்லத்தில் கடந்த பத்து வருடங்களாக வசித்து வரும் வதிரி, நெல்லியடியைச் சேர்ந்த வயோதிபத் தாயான பூவேந்திரம் தவபோசனம் (வயது 61) என்பவரே இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இவர் தொடர்பில் கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் தகவல் தெரிவிக்கையில்,

குறித்த பெண் திருமணமான ஒரு மாத காலத்தில் கணவனை இழந்ததாகவும் இவருக்கு ஒரே ஒரு மகன் இருப்பதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டது.

கணவனின் இழப்பு காரணமாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கைதடி முதியோர் இல்லத்தில் அவரது உறவினர்களால் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பெண்ணின் மகன் உறவினர்களால் வளர்க்கப்பட்டு தற்போது அவர் லண்டனில் பொறியியலாளராக கடமை புரிகின்றார் என தெரியவருகிறது.

தற்போது, இவர் ஓரளவு மனநலம் தேறி பழைய நினைவுகளுக்கு திரும்பி தனது மகனின் பெயர் மற்றும் உறவினர்களின் பெயர்களை கூறி வருகின்றார்.

இந்நிலையில், அவர் தனது மகனை தேடுவதாகவும் மகன் தன்னை வந்து பார்ப்பாரா? என குறித்த தாய் பாசம் மேலிட்ட நிலையில் ஏங்கி அதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தருமாறும் எம்மிடம் கோருகின்றார்.

இதனால், கைதடி முதியோர் இல்லத்தில் வசிக்கும் தாயைப் பார்ப்பதற்காக அவரது மகன் எங்கிருந்தாலும் உடனடியாக இல்லத்துடன் தொடர்பு கொண்டு குறித்த வயோதிபத் தாயின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Hosted by Privilegeserver Hosting